உப்பு சுமக்கும் கழுதைகள் இப்பொழுது செங்கற்களை சுமக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் ஒரு கட்டுமானப் பகுதிக்கு இந்த செங்கற்களை கொண்டுசெல்ல கழுதை மீது கற்களை ஏற்றுகிறார் ஊழியர் ஒருவர். ஒவ்வொரு கல்லும் 2.8 கிலோ கிராம் எடை கொண்டது. பெரும்பாலான கழுதைகள் ஒவ்வொரு முறையும் குறைந்தது 60 கற்களை சுமந்துசெல்லும் திறன்பெற்றவை என்று கூறப்படுகிறது. அடுத்தமுறை பஞ்சாப்பில் கட்டுமானப் பணி நடக்கும் கட்டடங்களைப் பார்க்கும்போது அதிலுள்ள கண்ணாடி, இரும்பை மட்டும் பார்க்காமல் கழுதைகளின் அளவுக்கதிகமான கடின உழைப்பையும் நினைவில் நிறுத்தவேண்டும். படம்: ஏஎஃப்பி
பொதி சுமக்கும் கழுதைகள் கற்களை சுமக்கும் நிலை
1 mins read
-

