நூறு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து, பின் வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக வெளிநாட் டிற்கு ஓடிச்செல்வோரின் சொத்து களைப் பறிமுதல் செய்யும் வகை யில் 'தப்பியோடிய பொருளியல் குற்றவாளிகள் மசோதா'வைத் தாக்கல் செய்த இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அண்மைய நாட்களாக வங்கி களில் கடன் மோசடி செய்தோர் குறித்து செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இந்தப் புதிய சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் கிட்டத்தட்ட ரூ.11,400 கோடி மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடியும் அவரது குடும்ப உறுப்பினர்களும் வெளிநாட்டில் உள்ளனர். நீரவ் மோடி, அவருடைய உறவினர் மெகுல் சோக்சி ஆகி யோரின் கடவுச்சீட்டுகள் முடக்கப் பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, டெல்லி யைச் சேர்ந்த நகை வியாபாரியான துவாரகா தாஸ் சேத்தும் அவரது கூட்டாளிகள் சிலரும் சேர்ந்து ஓரியன்டல் வங்கியில் ரூ.389 கோடி மோசடி செய்தது வெளிச்சத் திற்கு வந்தது. அவர்கள் அனை வரும் 2014லேயே நாட்டைவிட்டுத் தப்பியோடி விட்டனர். இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக அந்தப் பணத்தைத் திரும்பப் பெற முடியாமல் ஓரியன்டல் வங்கி திண்டாடி வருகிறது.
அந்த வரிசையில், உத்தரப் பிரதேச மாநிலம், காஸியாபாத் அருகே உள்ள சிம்பாஹோலி சர்க் கரை ஆலை, ஓரியன்டல் வங்கியில் 109 கோடி ரூபாய் மோசடி செய்து இருப்பது அம்பலமாகியுள்ளது. கரும்பு விவசாயிகளுக்குக் கடன் வழங்குவதற்காக எனக் கூறி 2011ஆம் ஆண்டில் ரூ.150 கோடியைக் கடனாகப் பெற்றது அந்தச் சர்க்கரை ஆலை. ஆனால், அந்தத் தொகையை விவசாயி களுக்குத் தராமல் தனது சொந்த வளர்ச்சிக்கு அந்த ஆலை பயன் படுத்திக்கொண்டதாகக் கூறப்படு கிறது. அந்த வகையில் 109 கோடி ரூபாய் பணத்தை அந்த ஆலை, வங்கிக்குத் திருப்பிச் செலுத்த வில்லை. இதையடுத்து, கடந்த 2015ல் அப்பணம் வாராக் கடனாக அறிவிக்கப்பட்டது.
பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்கின் மருமகன் குர்பால் சிங் அந்த ஆலையின் இயக்குநர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பொதுத் துறை வங்கி களில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்படுவது தொடர் கதையாகியுள்ள நிலையில், அதைத் திருப்பிச் செலுத்தாமல் தப்பியோடு பவர்களின் சொத்துகளைக் கைய கப்படுத்தி, அவற்றை விற்று, கடன் தொகையைத் திரும்பப் பெற அரசு உத்தேசித்துள்ளது.