சிவகங்கை கண்மாயில் சோழர் கால கல்வெட்டுகள்

2 mins read

சிவகங்கை: கண்மாய் மடையின் இருபுறமும் உள்ள சோழர் கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட் டுள்ளன. இதன்மூலம் சிவ கங்கை பகுதியில் 12ஆம் நூற்றாண்டில் விவசாயம் செழித் தோங்கி இருந்ததை அறிய முடிவ தாக தொல்லியல் ஆய்வாளர் வேதாசலம் தெரிவித்துள்ளார். சிவகங்கை அருகே உள்ள கள்ளராதினிப்பட்டி கிராமம். இங்குள்ள ஆதினிக் கண்மாயின் வடக்குப்பகுதி மடையின் இரு புறமும் 15 அடி உயரமுடைய இரு கற்கள் காணப்படுகின்றன. இவற்றுள் ஒரு கல்லின் கீழ்ப்புறத்தில் சில எழுத்துக்கள் இருப்பதை அப்பகுதியில் செயல் பட்டு வரும் டாக்டர் அப்துல்கலாம் நற்பணி மன்ற இளைஞர்கள் அண்மையில் கவனித்தனர்.

அந்த எழுத்துக்களுக்கான அர்த்தத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்று இந்த இளை யர்களுக்கு ஆர்வம் ஏற்பட் டுள்ளது. இதையடுத்து மதுரையைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாள ரான வேதாசலத்தை இளையர்கள் தொடர்புகொண்டனர். அவரது அறிவுறுத்தலின் பேரில் அக்குறிப் பிட்ட கல்லின் எழுத்துக்கள் படி எடுக்கப்பட்டன. பின்னர் அந்த எழுத்துக்களை ஆய்வு செய்த போது, அவை 12ஆம் நூற்றாண்டில் பொறிக் கப்பட்டவை என தெரிய வந்தது.

"செயங்கொண்ட சோழனான கள வழி நாடாள்வன் என்பவர் கண்மாயையும் மடைகளையும் அமைத்து கொடுத்துள்ளார். 126 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கண்மாய் விவசாயத்திற் காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயம் இப்பகுதியில் செழித்தோங்கி இருந்துள்ளதை அறிய முடிகிறது. "இருநூறு ஏக்கருக்கும் மேற்பட்ட பாசனப் பகுதி இக் கண்மாய் மூலம் பயனடைந் துள்ளது. இக்கண்மாயில் 3 மடைகள், 2 மறுகால் வழிகள் உள்ளன. வடபகுதியில் கலுங்கு ஒன்றும், தென்பகுதியில் எட்டுக் கண் பாலமும் உள்ளன. "இத்தகவல் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த வட்டெழுத் துகளால் பொறிக்கப்பட்டிருந்தன," என்று ஆய்வாளர் வேதாசலம் தெரிவித்துள்ளார்.