முடியைப் பார்க்க வேண்டாம்; முகத்தையும் கொள்கைகளையும் பாருங்கள்: சீமான்

முடியைப் பார்க்க வேண்டாம்; முகத்தையும் கொள்கைகளையும் பாருங்கள்: சீமான்

2 mins read
6eb9bb46-4a84-48fb-ad51-4da9c2758239
-

சென்னை: ஈழம் என்பது அரசியல் அல்ல, அவசியம் என்றும், ஈழ விடுதலை என்பது தமது இனத் தின் விடுதலை என்றும் சீமான் தெரிவித்துள்ளார். அண்மைய தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், தமது கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட் டுள்ளார். "தமிழகத்துக்கு என தனியாக ஓர் அமைப்பில்லை. அதைப் பற்றிப் பேசுவதே அறிவற்ற செயல். இந்தியாவின் அமைப்புதான் தமிழகத்துக்கும் உள்ளது. "கமல், ரஜினி போன்றோர் எதிர்த்து பேசியிருக்க வேண்டியது மத்திய அரசைத்தான். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடியை எடுத்துக்கொண்டு சென்ற நீரவ் மோடியை கமல் எதிர்க்கவே இல்லை," என்று சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை ஏற்கும் எவரு டனும் கூட்டணிக்குத் தயார் என்று குறிப்பிட்டுள்ள அவர், தமது அடையாளத்தை மறைக்க வேண்டிய அவசியம் எழவில்லை எனத் தெளிவுபடுத்தி உள்ளார். முருகப் பெருமானை போற்று வது தமது இனத்தின் மரபு என்றும், சீமான் என்பதே பெற்றோர் தமக்கு வைத்த பெயர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "ஆனால் என் மீது குறையே சொல்ல முடியாது என்பதற்காக ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் என்னை சைமன் என்றும் கிறிஸ்து வர் என்றும் கூறி வருகின்றனர்.

இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. "என்னுடைய பெயர் என்ன என்பதை என் தாய், தந்தையிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண் டும். அதை விட்டு விட்டு யார் யாரோ சொல்வதைக் கேட்பது என்ன நியாயம்? சிந்தனைகளில் குறை உள்ளதா? என்னைக் கிறிஸ்துவர் என்று கூறும் அந்த இயக்கத்தினர் இந்துக்களாக இருந்து என்ன செய்துவிட் டார்கள்?" என்று சீமான் சில கேள்விகளைப் பட்டியலிட்டுள்ளார்.

சீமான். படம்: இணையம்