சென்னை: நாட்டின் உயர் கல்வி மையங்களில் ஒன்றாக விளங்கும் சென்னையில் உள்ள ஐஐடியில் சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டது எதிர்ப்புகளைக் கிளப்பி உள்ளது. இதற்குக் காரணமான அதிகா ரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர். பொதுவாக தமிழகத்தில் எந்தவொரு அரசு நிகழ்ச்சி தொடங்கும்போது தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடப்படுவது வழக்கம். ஆனால் நேற்று நடைபெற்ற விழாவில் தமிழ்தாய் வாழ்த்துப் பாடலுக்குப் பதிலாக சமஸ் கிருதத்தில் கணபதி பாடலை மாணவர்கள் சிலர் பாடினர்.
மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்துப் பாடப்படாமல் இருந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. "ஐஐடி வளாகத்தில் நடை பெறும் விழாக்களின்போது எந்தப் பாடலை இறை வணக்க மாக இசைப்பது என்பதை மாண வர்கள்தான் முடிவு செய்வர். "இம்முறை சமஸ்கிருதப் பாடலைத் தேர்வு செய்தது மாண வர்கள்தான். இதில் அதிகாரி களுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை," என்று சென்னை ஐஐடி நிர்வாகம் விளக்கம் அளித் துள்ளது.

