ஓரியண்டல் வங்கி மோசடி; பஞ்சாப் முதல்வர் மருமகன் மீது வழக்கு

ஓரியண்டல் வங்கி மோசடி; பஞ்சாப் முதல்வர் மருமகன் மீது வழக்கு

1 mins read

புதுடெல்லி: வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்தவர்கள் பட்டியலில் தற்போது பஞ்சாப் முதல்வரின் மருமகனும் புதிதாக சேர்ந்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த சிம்போ ஹோலி சர்க்கரை ஆலை நிறு வனத்துக்கு ஓரியண்டல் வங்கி யில் இருந்து 97.85 ரூபாய் கோடி வழங்கியது. இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் அந்த நிறு வனம் மோசடி செய்தது. பஞ்சாப் மாநிலத்தின் முதல் வராக உள்ள, காங்கிரஸ் கட் சியைச் சேர்ந்த அம்ரீந்தர் சிங்கின் மருமகன் குர்பால் சிங் இந்நிறு வனத்தின் துணை நிர்வாக இயக்குனராக உள்ளார்.

இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, குர்பால் சிங் உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், தன் மருமகன் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கு அடிப்படையற்றது என அம்ரீந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகை யில், "எனது உறவினர் என்பதற் காகவே அரசியல் பழி வாங்கும் நோக்கில் என் மருமகன் குர்பால் சிங் மீது சிபிஐ இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது. இது அடிப் படையற்றது," எனத் தெரிவித்துள்ளார்.