கோகிமா: நாகாலாந்து, மேகாலயா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. நாகா அரசியல் பிரச்சி னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி ஏற்கெனவே வன்முறை போராட்டங்கள் நடைபெற்றதால் நாகாலாந்து தேர்தலில் இது எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலை யில் பல வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மொத்தம் உள்ள 2,156 வாக்குப்பதிவு மையங்களில் 1,100 மையங்கள் பதற்றம் நிறைந்தவையாகவும், 530 மையங்கள் தாக்குதல் அபாயம் நிறைந்தவையாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, நாகா போராட்டம் நடைபெற்ற மலைப்பகுதிகளில் அதிக அளவிலான மத்திய படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், மோன் மாவட் டத்தின் திஜிட் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் திடீரென குண்டு வெடித்தது. இதனால் வாக்காளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்தக் குண்டுவெடிப்பில் ஒருவர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

