நீரவ் மேலும் ரூ.1,300 கோடி மோசடி

நீரவ் மேலும் ரூ.1,300 கோடி மோசடி

1 mins read

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கி யில் நீரவ் மோடியின் 11,400 கோடி ரூபாய் மோசடி குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மேலும் 1,300 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றிருக்கலாம் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வைர வியாபாரியான நீரவ் மோடியும் அவரது உறவினரும் தொழில் பங்காளியுமான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மோசடி செய்தது கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி அம்பலமானது. அதைத் தொடர்ந்து, அவர்களது பல சொத்துகள் முடக் கப்பட்டு, வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மும்பை பங்குச் சந்தைக்கு கடந்த திங்கட்கிழமை பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூடுத லாக மோசடி நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குப் பரிமாற்றத்தில் அதிகார பூர்வமற்ற பரிவர்த்தனை மூலம் நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி ஆகிய இருவரும் கூடுதலாக 1,322 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அதில் கூறப்பட்டு உள்ளது. இது கிட்டத்தட்ட அந்த வங்கி யின் 2017ஆம் ஆண்டிற்கான மொத்த வருமானத்திற்கு இணை யாகும். இதுவரை மொத்தம் 12,622 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நீரவ் மோடியின் வெளிநாட்டுச் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையி லும் அரசு ஈடுபட்டு உள்ளது.