சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்படுவதற்கு பதில் வடமொழி வாழ்த்துப் பாடல் பாடப்பட்டதைக் கண்டித்து தமாகா இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மொழியையும் தமிழர்களின் உணர்வையும் தொடர்ந்து சிறுமைப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக சாடியுள்ளார். இனிமேலாவது மத்திய அரசு தமிழர்களின் மனதைப் புண்படுத்தக்கூடாது என அவர் கூறியுள்ளார். படம்: தகவல் ஊடகம்.
வடமொழி திணிப்புக்கு இளையர்கள் எதிர்ப்பு
1 mins read
-

