திருநாவுக்கரசர்: பாஜகவுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவர்

திருநாவுக்கரசர்: பாஜகவுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவர்

1 mins read

சென்னை: பிரதமர் மோடி தொடங்கி மத்திய அமைச் சர்கள் வரை அனைவரும் தமிழகத்தையும், தமிழ் மொழியையும் தொடர்ந்து புறக்கணிப்பதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சாடியுள்ளார். மேலும், பாஜகவினர் தேவையின்றி காங்கிரஸ் கட்சியை வரம்பு மீறி வசை பாடுவதாகவும் அவர் குறை கூறியுள்ளார். இத்தகைய செயல்பாடுக ளுக்கும், காங்கிரஸ் இல் லாத பாரதம் என்று கனவு காண்பதற்கும் பாஜகவுக்கு தமிழக மக்கள் தேர்தலின் போது சரியான பதிலடி தரு வார்கள் என்று அறிக்கை ஒன்றில் திருநாவுக்கரசர் குறிப்பிட்டுள்ளார்.

"காவிரிப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பிரதமர் மோடி எதுவும் கூறாதது தமிழக விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. "கடந்த காலத்தின் நடுவர் மன்ற இறுதித் தீர்ப் பின்படியும், உச்ச நீதிமன்ற ஆணையின்படியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த நரேந்திர மோடி அரசு, மறுபடியும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனப்படுத்திவிடுமோ என்கிற அச்சம் விவசாயி களிடம் இருக்கிறது," என திருநாவுக்கரசர் மேலும் தெரிவித்துள்ளார்.