31 வங்கிகளில் கீதாஞ்சலி ரூ.5,280 கோடி மோசடி

31 வங்கிகளில் கீதாஞ்சலி ரூ.5,280 கோடி மோசடி

1 mins read

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் நடந்த ரூ.11,400 கோடி இமாலய மோசடி விவகாரம் தொடர்பில் வைர வியாபாரி நீரவ் மோடி வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, இப்போது மற்றொரு வங்கி மோசடிச் சம்பவம் அம்பல மாகி உள்ளது. நீரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்‌ஷியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் குழுமம் ரூ.5,280 கோடி மதிப்புள்ள வங்கிக் கடனை வாங்கிவிட்டு அதை இன்னும் திருப்பிச் செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

கீதாஞ்சலி குழுமத்தில் விசா ரணை முகமைகள் நடத்திய சோத னையின்போது முக்கியமான பத்திரங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. அதில் 31 வங்கிகளுடன் கீதாஞ்சலி குழுமம் செய்துகொண்ட ஒப்பந்தப் பத்திரங்களும் இருந்தன. இதுதொடர்பாக இந்தியா டுடே ஊடகம் வெளியிட்டுள்ள தகவ லின்படி, முதலீடு என்ற பெயரில் 31 வங்கிகளில் மொத்தம் ரூ.5,280 கோடியை கடனாகப் பெற்ற கீதாஞ் சலி நிறுவனம் அதை இன்று வரை திருப்பிச் செலுத்தவில்லை என்ற தகவல் கசிந்துள்ளது.