வீட்டில் கழிவறை கட்டும்வரை உண்ணாவிரதம் இருந்த மாணவி

1 mins read

பெல்லாரி: கர்நாடகாவில் தனது வீட்டில் கழிவறை கட்டும் வரை உண்ணாவிரதம் இருந்த மாணவியை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லேஷ். அவரது மகள் மஹனகலி, 13. அங்குள்ள அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பில் படிக்கிறார். அண்மையில் கழிவறை கட்டவேண்டியதன் அவசியம் குறித்து அவரது பள்ளியில் அறிந்துகொண்ட மஹனகலி, வீட்டுக்கு வந்ததும் தந்தையிடம் கழிவறை கட்டும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் கூறினார். மாணவியிடம் உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அதிகாரிகள் எவ்வளவு கூறியும் கேட்காததால் அவரது வீட்டில் கழிவறை கட்டுவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்தனர். இருநாட்களில் கழிவறை கட்டி முடிக்கப்பட்டதும் மாணவி உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.