கொச்சி: கேரள மாநிலம், கொச்சியில் உள்ள ஒரு பெரிய பாலத்தில் இருந்து கடலில் குதித்து உயிரை விட்டுவிட நினைத்த இளம் பெண்ணை 19 வயதே ஆன இளைஞர் ஒருவர் உயிரைப் பணயம் வைத்து மீட்டதைக் கண்டு அவரை கேரள மக்கள் சால்வை போர்த்தி பாராட்டி வருகின்றனர். வெண்டுருத்தி பாலத்தின் மீது பெரும்கூட்டம் கூடியிருப்பதைக் கண்டு விசாரித்தபோது யாரோ கடலில் விழுந்து விட்டார்கள் என்று கூறப்பட்டது. உடனே ஒரு கணமும் யோசிக்காமல் கடலில் குதித்த ஜீவன் என்ற இளைஞர், கடலில் தத்தளித்த இளம் பெண்ணை தூக்கி தோளில் போட்டபடி நீந்திக் கரை சேர்ந்தார். உடலின் பாரம் தாளாமல் அவரும் மயங்கிய நிலையில்தான் கரை ஒதுங்கி னார். பொதுமக்கள் இருவரையும் இழுத்து கரைசேர்த்தனர்.
கடலில் குதித்து பெண்ணை மீட்ட இளைஞனுக்கு குவிகிறது பாராட்டு
1 mins read

