மெகுலின் ரூ.1,217 கோடி சொத்துகள் முடக்கம்

மெகுலின் ரூ.1,217 கோடி சொத்துகள் முடக்கம்

fallback

02 Mar 2018 - 6:00 am

1 mins read

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த குற்றவாளிகளுள் ஒருவ ராகக் கருதப்படும் மெகுல் சோக் சியின் ரூ.1,217 கோடி மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய் துள்ளனர் அமலாக்கத்துறை அதிகாரிகள். "வைர வியாபாரி நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி நிறுவனங் களில் முன்னதாக செய்யப்பட்ட சோதனைகளின்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மெகுல் சோக்சியின் ரூ.1,217.20 கோடி மதிப்புள்ள 41 சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளோம்," என்று அமலாக்கத்துறையினர் கூறினர். அவற்றில் மும்பையில் மட்டும் 15 வீடு கட்டும் நிலங்கள், 17 அலுவலகக் கட்டடங்கள், கோல் கத்தாவில் வணிக வளாகம், அலிபாக் நகரில் பண்ணை வீடு, நாசிக், நாக்பூர், பன்வன், தமிழ கத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலங்கள் ஆகிய அனைத் தும் முடக்கப்பட்டன. இந்நிலங் களின் பரப்பளவு 231 ஏக்கர்.

அத்துடன் தெலுங்கானா மாநிலம், ரெங்கா ரெட்டி மாவட் டத்தில் உள்ள 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 170 ஏக்கர் பூங்கா வையும் முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.