பூச்சாண்டி காட்டுகிறார் ரஜினி: இளங்கோவன்

பூச்சாண்டி காட்டுகிறார் ரஜினி: இளங்கோவன்

2 mins read
7f4ac2e2-7068-4a56-adc6-3464010e182a
-

சென்னை: ஆன்மீக அரசியல் என்று நடிகர் ரஜினி பூச்சாண்டி காட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு செய்ய வேண்டியதை ரஜினி இப் போது செய்வதாகக் குறிப்பிட்டார். புதுக்கட்சி தொடங்குமாறு ரஜினிக்கு பாஜக தலைமை அழுத் தம் கொடுப்பதாகவும் அதன் காரணமாகவே ரஜினி சில விஷயங்களைப் பேசுவதாகவும் இளங்கோவன் கூறினார்.

"புதிதாக கட்சி தொடங்கி இவர்கள் மக்களுக்கு என்ன செய்வார்கள்? கட்சி தொடங்க தமிழக மக்கள் மீது கொண்ட அக்கறை காரணமா? அல்லது தமிழகத்தை முன்னேற்றம் காணச் செய்வது இவர்களது லட்சியமா? "எதுவும் கிடையாது. கையில் இருக்கிற திரைப்படங்கள் நன் றாக ஓடவேண்டும். மனைவி செய்த தவறுக்கு தீர்வு காண வேண்டும். அவ்வளவுதான்! "ரஜினி வருவதும் தெரியாது. போவதும் தெரியாது. நிச்சயமாக அரசியல் கட்சி தொடங்கவே மாட்டார்," என்றார் இளங்கோவன்.

வட இந்தியாவில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் பெற்று வரும் வெற்றியானது மக் கள் பிரதமர் மோடியை தூக்கி எறிய தயாராகிவிட்டார்கள் என் பதைக் காட்டுவதாகக் குறிப்பிட்ட அவர், மத்தியில் ராகுல் பிரதமர் ஆவதும் தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வர் ஆவதும் உறுதி என்றார். "மத்தியில் ஒரு மதவாத ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் செயல்படாத, ஒரு பக்கவாத ஆட்சி நடக்கிறது. தங்களை அடையாளம் காட்டியவரை அம்மா, தாயே என்று தாங்கள் துதிபாடியவரை, அவரை இழந்த ஓராண்டுக்குள் அதிமுகவினர் மறந்துவிட்டார்கள். அவரது முகம் கூட இப்போது அவர்க ளுக்கு நினைவில்லை. அதனால் தான் ஜெயலலிதா சிலை அப்படி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத் தில் நடக்கும் ஆட்சிக்கு முடிவு கட்டியாக வேண்டும்," என்றும் இளங்கோவன் வலியுறுத்தினார்.