திருக்கோவிலூரில் தலித் சிறுவன் கொல்லப்பட்டு, தாய், மகள் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. வெள்ளம்புத்தூரைச் சேர்ந்த ஏழுமலை நான்கு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். இவரது மனைவி, 8ஆம் வகுப்பு பயிலும் மகள், 4ஆம் வகுப்பு படித்துவந்த மகனுடன் வசித்து வந்தார். கடந்த 22ஆம் தேதி இரவு அவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், மூவரையும் தாக்கியுள்ளனர். தாயும் மகளும் சுயநினைவு திரும்பாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருக்கோவிலூரில் அனைத்துக் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. படம்: ஊடகம்
அனைத்துக் கட்சி சார்பில் சாலை மறியல்
1 mins read
-

