இந்தியா, சென்ற ஆண்டு அக் டோபர் முதல் டிசம்பர் வரைப்பட்ட மூன்று மாத காலத்தில் உலகிலேயே ஆக வேகமாக வளர்ச்சி காணும் பெரிய பொருளியல் என்ற நிலையில் இருந்தது. ஓராண்டில் பார்க்கையில் அது இந்த வளர்ச்சியில் சீனாவை முந்தி விட்டது. அரசாங்கச் செலவினம், உற்பத்தி, சேவைத்துறை எல்லாம் இந்தியாவில் வளர்ச்சி கண்டன. ஆசியாவின் மூன்றாவது ஆகப் பெரிய பொருளியலாகத் திகழ்கின்ற இந்தியா, சென்ற ஆண்டின் கடைசி காலாண்டில் 7.2% வளர்ச்சி அடைந்தது. ஐந்து காலாண்டுகளில் இந்த வளர்ச்சியே ஆக அதிகமானது என்று புள்ளிவிவரத் துறை அமைச் சின் விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்தக் காலகட்டத்தில் சீனா 6.8% வளர்ச்சியைச் சாதித்தது. இந்தியா, 2017=18ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.6% ஆக இருக்கும் என அதிகப்படுத்தி உள்ளது. இந்த வளர்ச்சி 6.5% இருக்கும் என்று முன்பு புதுடெல்லி கணித்திருந்தது.
இந்தியாவில் புதிதாக நடப்புக்கு வந்த ஜிஎஸ்டி வரி காரணமாக சென்ற ஆண்டு ஜூலை மாதம் அந்த நாட்டின் உற்பத்தித் துறையும் சேவைத் துறையும் பல பிரச்சினை களை எதிர்நோக்கின. இருந்தாலும் கடைசி காலாண் டில் உற்பத்தித் துறை 8.1% வளர்ச்சி அடைந்தது. நிதி மற்றும் சேவைத் துறை 7.2% கூடியது. ஜிஎஸ்டி வரி ஏற்பாடு இப்போது சீராகிவிட்டது என்றும் இதனால் அடுத்த நிதி ஆண்டில் வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைக்கும் என்றும் பொருளியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

