இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் நிபந்த னையின் பேரில் அவருடைய புதல்வர் கார்த்தி சிதம்பரத்திடம் தாங்கள் US$700,000 ($$928,800) லஞ்சம் கொடுத்ததாக ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குநர்கள் ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் இதன் அடிப்படையிலேயே கார்த்தி சிதம்பரம் சிபிஜ அதிகாரி களிடம் சிக்கினார் என்றும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கடந்த 2007ஆம் ஆண்டு, நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை அவரது வடக்கு பிளாக் அலுவலகத்தில் தாங்கள் சந்தித்ததாகவும் தங்கள் நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளைப் பெறு வதற்கான ஒப்புதலை அளிக்குமாறு அவரிடம் தாங்கள் கேட்டுக் கொண்டதாகவும் ஐஎன்எக்ஸ் மீடியா இயக்குநர்களான பீட்டர் முகர்ஜி = இந்திராணி முகர்ஜி தம்பதி இருவரும் வாக்குமூலங் களில் தெரிவித்துள்ளனர்.
இதன் தொடர்பில் தங்களிடம் பேசிய அமைச்சர், கார்த்தி சிதம் பரத்தின் வர்த்தகத்துக்கு உதவும் வகையில் வெளிநாட்டுப் பணத்தை அவருக்கு அளிக்குமாறு தங்களைக் கேட்டுக்கொண்டதாக அந்த இயக்குநர்கள் குறிப்பிட்டுள்ளனர். அமைச்சர் கூறியதை அடுத்து புதுடெல்லியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கார்த்தி சிதம் பரத்தைத் தாங்கள் சந்தித்தபோது அவர் பத்து லட்சம் டாலர் கேட்டதாக வும் தம்பதியர் வாக்குமூலத்தில் தெரிவித்தனர்.
இருந்தாலும் பிறகு தாங்கள் கார்த்தி தொடர்புடைய வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் US$700,000 செலுத்தியதாகவும் அது தங்கள் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடு கிடைக்க ஒப்புதல் அளித்ததற்குப் பிரதி பலனாக கொடுத்த தொகை என்றும் அத்தம்பதியர் அளித்த வாக்கு மூலங்கள் குறிப்பிடுவதாக இந்தியத் தகவல்கள் கூறின. இந்த வாக்குமூலங்களை கார்த்தி, ப சிதம்பரம் இருவரும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதனிடையே, கைதுசெய்யப்பட் டுள்ள கார்த்தி சிதம்பரத்தை ஒருநாள் காவலில் எடுத்து விசா ரணை நடத்த சிபிஐ அதிகாரிகள், நேற்று முன்தினம் அவரை புது டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். அவரை ஒருநாள் சிபிஐ காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

