மதுரை: தமிழக அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகாருக்கு ஆதாரம் இல்லை என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு இயக்குநர் தெரிவித்துள்ளார். மதுரை தல்லாகுளம் மகேந் திரன் என்பவர் மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல்செய்த ஒரு மனுவில், தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோடானுகோடி சொத்துகளைக் குறைந்த விலையில் வாங்கி குவித்து இருக்கிறார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக் குவிப்பு புகார் மீதான விசாரணை அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்து ராஜேந்திர பாலாஜி மீதான புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றார். விசாரணை அறிக்கை அரசுக்கு அனுப்பப் பட்டதாகவும் அதை ஏற்று அமைச் சருக்கு எதிரான புகார் மீதான நடவடிக்கையைக் கைவிட 4.2.2014ல் பொதுத்துறை உத்தர விட்டதால் வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் அவர் வாதாடினார். இதையடுத்து விசாரணை ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு இயக்குநரும் விரிவான அறிக்கையை அரசும் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

