5,200 குழந்தைகள் மீட்பு

5,200 குழந்தைகள் மீட்பு

1 mins read
21cb76fd-b11c-4631-ba41-96d37005699d
-

கோவை: தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 5,200 குழந்தைகளை ரயில்வே போலிசார் மீட்டுள்ளனர் என்று ரயில்வே போலிஸ் அதிகாரி ஜோர்ஜி ஜார்ஜ் தெரிவித்தார். தமிழக ரயில் நிலையங்களில் குழந்தைக் கடத்தலைத் தடுக்க 'உதயம் தன்னார்வத் தொண்டு அமைப்பு' உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன், கோவை ரயில் நிலையத்தில் இந்த அமைப்பு தொடங்கப் பட்டது. அதில் பேசிய அதிகாரி, கடந்தாண்டு மட்டும் 226 பெண் குழந்தைகள் உட்பட, 2,068 குழந்தைகள் ரயில்வே போலிசாரால் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தமிழகம் முழுவதும் இத்திட்டம் அடுத்தடுத்து தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிள்ளைகளை அடையாளம் காண்பது பற்றிய விழிப்புணர்வை ரயில் பயணிகளிடையே அப்போதைக்கு அப்போது அரசு சாரா அமைப்புகள், மாணவிகளுடன் சேர்ந்து அதிகாரிகள் ஏற்படுத்திவருகிறார்கள். சென்ற ஆண்டில் காட்பாடி நிலையத்தில் அவர்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். படம்: தமிழக ஊடகம்