கொடைரோடு: திண்டுக்கல் கொடைரோடு பகுதியையொட்டி ஜெ.மெட்டூர் சிறுமலை அடிவாரத் தில் கேரளாவைச் சேர்ந்த தாமஸ் என்பவர் நிர்வகித்துவரும் புனித ஜோசப் ஹாஸ்பீசஸ் என்ற தனியார் கருணை இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்தக் காப்பகத்தில் மட்டும் கடந்த ஆண்டு முதியவர்கள் 319 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் மட்டும் 24 பேர் இறந் துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அங்குள்ள முதியவர்களிடம் மேலும் மேலும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 28 முதியவர்கள் அங்கிருந்து வெளியேற விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். காப்பகத்தில் நடந்த விசாரணை அறிக்கை முழுவதும் மாவட்ட ஆட்சியரிடம் தாக்கலாகும். அதன் பின்னர் இந்தக் காப்பகம் இங்கு தொடர்ந்து செயல்படுமா என்பது தெரியவரும். இந்தக் காப்பகத்தில் இப்போது 121 மூதாட்டிகள் உள்பட 238 பேர் பராமரிக்கப்பட்டு வருவது குறிப் பிடத்தக்கது.

