காஞ்சிபுரம்: காஞ்சி சங்கரமட நிர்வாகத்தில் அதிரடியாக மாற்றங் களைச் செய்ய புதிய மடாதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் விஜயேந் திரர் திட்டமிட்டு வருவதாகவும் அதற்கு எதிராக இப்போதே சல சலப்புகள் எழத் தொடங்கிவிட்ட தாகவும் தமிழக தகவல்கள் தெரி விக்கின்றன. சந்திரசேகரேந்திர சுவாமிகள் மறைவுக்குப் பிறகு, 1994ஆம் ஆண்டு காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியாக பொறுப் பேற்றுக்கொண்டு, மடத்தினை வழி நடத்தி வந்த ஜெயேந்திரர், அரசிய லோடு ஆன்மிகத்தையும் கலந்து செயல்பட்டவிதம் சர்ச்சையைக் கிளப்பினாலும் அவர் தன் பணி களில் உறுதியாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜெயேந்திரர் மரணம் அடைந்த உடனேயே மடத்துக்குள் நிர்வாகச் சிக்கல்கள் எழுந்துவிட்டது என்று மடத்தின் பக்தர்கள் கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மரணம் அடைந்த பெரியவருக் கும் இப்போதைய இளையவருக் கும் இடையில் அவ்வப்போது சில மோதல்கள் எழுந்தது உண்டு என்று காஞ்சி மடத்தோடு நெருங் கிய தொடர்பில் உள்ள ஜெயேந் திரர் ஆதரவாளர் ஒருவர் கூறிய தாக ஊடகம் ஒன்று குறிப்பிட்டது.
கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் ஆந்திராவில் உள்ள சங்கர மடத்துக்கு விரதம் இருக்க ஜெயேந் திரர் சென்றபோது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் இதற்கு இளையவரின் தொடர்ச்சியான அணுகுமுறைகள் தான் காரணம் என்றும் இருவருக் குள்ளும் அவ்வப்போது நேரடியான வாக்குவாதங்களும் நடந்தது உண்டு என்றும் அந்த ஆதரவாளர் சொன்னார். ஜெயேந்திரர் இறந்தபிறகு, மடத் தின் முழு கட்டுப்பாட்டையும் தன் பிடிக்குள் கொண்டுவர இளையவர் முயற்சி செய்துகொண்டிருப்ப தாகவும் நிர்வாகத்துக்குள் மாற்றங் களைச் செய்ய அவர் விழைவ தாகவும் அந்த ஆதரவாளர் சொன் னதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிராக சலச லப்புகள் தலைதூக்கி வருவதாக வும் அந்த ஆதரவாளர் குறிப்பிட்டு உள்ளார்.

