'கணவருக்குத் தண்ணீர் கொடுக்காதது கொடுமையாகாது

'கணவருக்குத் தண்ணீர் கொடுக்காதது கொடுமையாகாது

2 mins read

கணவரின் தேவை அறிந்து பணிவிடை செய்யாமல் இருப்பதும் கணவர் வேலை முடிந்து தாமதமாக வீட்டிற்கு வரும்போது அவருக்கு தண்ணீர் கொடுக்காமல் இருப்ப தும் கொடுமை ஆகாது என்று இந்தியாவின் மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் முழுமை யாக வெளிவராத நிலையில், மேகாலயாவில் காங்கிரஸ், திரிபுராவில் பாஜக, நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சியைப் அமைக்கும் நிலை இருந்தது. திரிபுரா மாநில முடிவுகள் வரத் தொடங்கியதையடுத்து அகர்தலா நகரில் பாஜகவினர் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளைத் தடவிக்கொண்டு மகிழ்ச்சியில் கூத்தாடி திளைத்தனர். படம்: ராய்ட்டர்ஸ் தன் மனைவி தன்னைக் கொடுமைப்படுத்துகிறார் என்று கூறி மும்பை சாந்தாகுருஸ் பகுதியைச் சேர்ந்த 57 வயது கணவர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மணவிலக்கு வேண்டுமெனக் கேட்டார். தன் தேவை அறிந்து மனைவி செயல்படுவதில்லை என்றும் தவித்த வாய்க்குத் தண்ணீர்கூட கொடுப்பதில்லை என்றும் தன் மனைவி தாமதமாக எழுந்து சமைப்பதுடன், ருசியாக சமைப்ப தும் இல்லை என்றும் அந்த வங்கி ஊழியர் தனது மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் இத்தகைய காரியங்கள் எல்லாம் மனைவி, கணவரைக் கொடுமை செய்ததாக ஆகாது என்று தீர்ப் பளித்தனர். "உங்கள் மனைவியும் ஆசிரியராக வேலை பார்க்கிறார். வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பி காலையிலும் மாலையிலும் வீட்டில் அவரே சமைக்கிறார். வேலையில் இருந்து வீடு திரும்பும்போது உங்கள் மனைவியே காய்கறி முத லானவற்றை வாங்கி வருகிறார். "வேலையுடன் குடும்ப வேலை களையும் செய்வதால் ஏற்படக் கூடிய களைப்பையும் தாங்கிக் கொண்டு உங்கள் மனைவி நாட் களைக் கடத்தி வருகிறார்.

"பாலியல் தொடர்புக்கு அவர் இணங்கவில்லை. சமைக்க வில்லை. தண்ணீர் கொண்டுவந்து கொடுக்கவில்லை. உங்களுடைய உறவினர்களை நன்கு கவனிக்க வில்லை என்றெல்லாம் உங்கள் மனைவி மீது நீங்கள் குறைகூறு கிறீர்கள். "இவை எல்லாம் கொடுமை ஆகாது. இத்தகைய குற்றச்சாட்டின் அடிப்படையில் உங்களுக்கு மண விலக்கு கொடுக்கமுடியாது," என்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தாதெட், சாரங் கோட் வால் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.