பாரிஸ் நகர ரயில் நிலையத் தில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு வைர வியாபாரிகளி டம் US$370,000 (S$487,563) மதிப்புள்ள விலை உயர்ந்த கற்களைக் கொள்ளைக்காரர் கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள் என்று புலன் விசாரணைத் துறை தகவல் வட்டாரம் தெரிவித் தது. அந்த இரண்டு வியாபாரி களும் வர்த்தகக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு விட்டு திரும்பி வந்த நேரத் தில் இரண்டு கொள்ளைக் காரர்கள் அவர்களைத் தாக்கி விட்டார்கள் என்று அந்தத் தகவல் வட்டாரம் கூறியது. லி பாயிண்ட் என்ற பாரிஸ் சஞ்சிகை ஒன்றும் இந்தக் கொள்ளைச் சம்பவத்தை உறுதிப்படுத்தியது. விலை மதிப்புமிக்க பல கற்கள் இருந்த ஒரு பை கொள்ளை யடிக்கப்பட்டது என்றும் அப் பையில் வைரங்கள் இல்லை என்றும் அந்தத் தகவல் வட்டாரம் குறிப்பிட்டது. கொ ள் ளை ய ர் க ள் திட்டமிட்டு இக்காரியத்தைச் செய்திருக்கிறார்கள் என்றும் அந்த வட்டாரம் கூறியது.
இந்திய வியாபாரிகளிடம் US$370,000 வைரம் கொள்ளை
1 mins read

