வடகிழக்கிலும் பாஜக வலுவடைகிறது

வடகிழக்கிலும் பாஜக வலுவடைகிறது

1 mins read
d75e194d-2684-453a-8adf-162700e31b7a
-

இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, நாட்டின் வட கிழக்கிலும் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. வட்டார கட்சிகளுடன் விவேகமான முறையில் கூட் டணி அமைத்ததும் கலவரங் களை ஒடுக்க நடவடிக்கை எடுத்ததும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ், வடகிழக்கில் மக்களை எட்டு வதற்கு மும்முரமாக மேற் கொண்ட முயற்சிகளும் அந்தக் கட்சிக்கு திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் களில் குறிப்பிடத்தக்க வெற் றியை ஈட்டித் தந்துள்ளன. "திரிபுராவில் பாஜகவின் வெற்றி புதிய வரலாற்றை உருவாக்கிவிட்டது," என்று பிரதமர் மோடி நேற்று பெரு மிதத்துடன் குறிப்பிட்டார். "மேகாலயாவை கணக்கில் கொள்ளவில்லை என்றாலும் பாஜகவும் அதன் தலைமை யிலான கூட்டணியும் இப் போது இந்தியாவில் 21 மாநிலங்களைக் கைப்பற்றி விட்டன. பிரதமர் மோடிக்கும் அவரின் அரசாங்கத்திற்கும் வெற்றிமேல் வெற்றி கிட்டி வருகிறது," என்று பாஜக தலைவர் அமித் ஷா குறிப் பிட்டார்.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் முழுமை யாக வெளிவராத நிலையில், மேகாலயாவில் காங்கிரஸ், திரிபுராவில் பாஜக, நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சியைப் அமைக்கும் நிலை இருந்தது. திரிபுரா மாநில முடிவுகள் வரத் தொடங்கியதையடுத்து அகர்தலா நகரில் பாஜகவினர் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளைத் தடவிக்கொண்டு மகிழ்ச்சியில் கூத்தாடி திளைத்தனர். படம்: ராய்ட்டர்ஸ்