சீஷெல்ஸ் தீவில் ராணுவத் தளம் அமைக்க ஆதரவு

சீஷெல்ஸ் தீவில் ராணுவத் தளம் அமைக்க ஆதரவு

1 mins read

விக்டோரியா: சீஷெல்ஸ் தீவில் ராணுவத் தளத்தை அமைக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு அத் தீவின் அரசியல்வாதிகள் ஆதர வுக் குரல் கொடுத்துள்ளனர். ஆனால் தீவில் உள்ள உள்ளூர் மக்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். சீஷெல்ஸ் தீவில் ராணுவத் தளத்தை அமைக்க இந்தியா நிதி வழங்குகிறது. இந்த ராணுவத் தளத்தை இரண்டு நாடுகளின் ராணுவங்கள் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2015ல் இந்தியப் பிரதமர் மோடி, சீஷெல்ஸ் தீவுக்குப் பயணம் மேற்கொண்டபோது அங்கு ராணுவத்தளம் அமைக்கும் திட்டம் முன் வைக்கப்பட்டது.

ஆனால் இந்தத் திட்டம் வேகம் பிடிக்காமல் மெதுவாகவே நகர்ந்து வருகிறது. இந்நிலையில் இத்திட்டம் பற்றி கருத்து கூறிய மாஹே தீவில் உள்ள விக்டோரியாவைத் தள மாகக் கொண்ட சீஷெல்ஸ் அர சாங்கம், அதன் 1.3 மில்லியன் சதுர கிலோ மீட்டர் கடற்பரப்பில் ரோந்துக் காவலுக்கு புதிய ராணுவத்தளம் உதவும் என்று கூறியது. சில நூறு பேர் மட்டுமே உள்ள இந்தத்தீவில் ஒரே ஓர் அஞ்சலம் மட்டுமே செயல்படுகிறது. ஏழு கிலோ மீட்டருக்கும் குறைவாகவே தீவின் நீளம் உள்ளது. ஆனால் மொசாம்பிக் கடற் பகுதியில் கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் கேந்திர முக் கியத்துவம் வாய்ந்த இடத்தில் சீஷெல்ஸ் தீவு அமைந்துள்ளது.