புதுடெல்லி: மூன்று நாள் பயணம் மேற்கொண்டு இந்தியா வந்து உள்ள வியட்னாமிய அதிபர் டிரான் டாய் குவாங்குக்கும் அவரது மனைவிக்கும் நேற்று முன்தினம் விமான நிலையத் தில் சிறப்பான வரவேற்பு அளிக் கப்பட்டது. இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்தின் அழைப்பை ஏற்று அவர் இந்தியா வந்துள்ளார். நேற்றுக் காலை டெல்லியில் உள்ள அதிபர் மாளிகைக்கு திரு டிரான் வருகையளித்தார். அப்போது அவரை ராம்நாத் கோவிந்தும் பிரதமர் மோடியும் வரவேற்றனர். திரு டிரானுக்கு பாரம்பரிய முறைப்படி முப்படை அணி வகுப்புடன் வரவேற்பு அளிக்கப் பட்டது.
பின்னர் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவ ராஜை அவர் சந்தித்துப் பேசி னார். இந்திய தொழிலதிபர் களுடன் கலந்துரையாடும் அவர், பீகாரில் உள்ள புத்த கயாவுக்கும் செல்கிறார். இரு நாட்டு பிரத மர்கள் முன்னிலையில் ராணுவம், எரிவாயு, விவசாயம், ஜவுளி உட்பட 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இது குறித்து பேசிய பிரதமர் மோடி, "இந்தியா-வியட்னாம் நல்லுறவின் அடிப்படையில் வியட்னாமைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியாவில் கல்வி, தொழிற் கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது. இனி வருங்காலங்களில் ராணு வம் உள்ளிட்ட பாதுகாப்பு, தொழில்நுட்பத் துறையிலும் நல் உறவை மேம்படுத்த விரும்பு கிறேன்," என்றார்.
அதிபர் மாளிகை நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்க வந்த வியட்னாம் அதிபர் டிரான் டாய் குவாங்கையும் அவரது மனைவியையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் ராம் நாத் கோவிந்தும் (வலமிருந்து 2வது) வரவேற்கின்றனர். படம்: ஏஎஃப்பி

