தாய்ப்பால் ஊட்டும் படம்: அழகிக்கு சிக்கல்

தாய்ப்பால் ஊட்டும் படம்: அழகிக்கு சிக்கல்

2 mins read
249facf0-8f7c-4ad3-9f43-eab264a49505
-

கொல்லம்: குழந்தைக்குத் தாய்ப் பால் ஊட்டுவதைப் போன்று படத் தை வெளியிட்ட மாதம் இரு முறை வெளியாகும் மலையாள இதழ் மீதும் அந்த அட்டைப்பட விளம்பர அழகி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாய்ப்பால் ஊட்டும் அவ சியத்தை உணர்த்தும் வகையில் விளம்பர அழகி தாய்ப்பால் ஊட் டும் படத்தையும் கட்டுரைகளையும் மலையாள இதழான 'கிருகலட்சுமி' அண்மைய இதழில் வெளியிட்டது. ஆனால் அட்டைப் படத்தைக் கண்டித்து பலர் சமூக ஊடகங் களில் குரல் கொடுத்துள்ளனர். மேலும் அட்டைப் படத்தில் உள்ள விளம்பர அழகிக்கு எதிராக கொல்லம் மாவட்ட நீதிமன்றத்தில் சமூக நல ஆர்வலரான வினோத் மேத்யூ என்பவர் வழக்குத் தொடுத்துள்ளார்.

இவர் தாக்கல் செய்துள்ள மனு வில் "திருமணமாகாத விளம்பர அழகியான ஜிலு ஜோசப் என்ப வரின் படம் அட்டைப் படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்தப் படம் விழிப் புணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக வெளி யிடப்பட்டுள்ளது. ஆபாசமாகவும் உள்ளது. எந்தத் தாயும் இப்படி ஆபாசமாக நடித்திருக்க மாட்டார்கள். இந்த இதழ் மீதும் நடிகை மீதும் நட வடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இதனால் மலையாள இதழ், விளம்பர அழகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே விளம்பர அழகி, முன்னாள் விமானப் பணிப்பெண், கவிஞர், எழுத்தாளர் என பல முகங்களைக் கொண்ட 27 வயது ஜிலு ஜோசப், இந்தப் புகைப்படத் துக்கான காரணத்தை தெரிந்து கொண்டதும் உடனே சம்மதித் தேன் என்றும் படத்தில் உள்ளது என் குழந்தை அல்ல என்றும் சிலர் தவறான பார்வையில் படத்தைப் பார்க்கின்றனர் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் சமூக ஊடகங்களில் தாய்ப்பால் ஊட்டும் அட்டைப் படத்தை எதிர்த்தும் ஆதரித்தும் கருத்துகள் வெளி யாகி வருகின்றன.

அட்டைப் படத்தில் விளம்பர அழகி ஜிலு ஜோசப். படம்: இந்திய ஊடகம்