பிள்ளைகள் வாகனம் ஓட்டியதற்காக பெற்றோர்களுக்குச் சிறைத் தண்டனை

பிள்ளைகள் வாகனம் ஓட்டியதற்காக பெற்றோர்களுக்குச் சிறைத் தண்டனை

1 mins read

புதுடெல்லி: தென்னிந்திய நகர மான ஹைதராபாத் நகரில் தங்க ளுடைய பிள்ளைகளை வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர் களுக்கு ஒரு நாள் சிறைத் தண் டனை விதிக்கப்பட்டது. கடந்த மாதம் இதே காரணத் துக்காக 35 பெற்றோர்கள் ஒரு நாள் சிறைத் தண்டனையை அனு பவித்தனர் என்று அந்நகர காவல் துறையினர் தெரிவித்தனர். பிபிசிக்கு பேட்டியளித்த பெற் றோர்கள், வயது வராத பிள்ளை களை வாகனம் ஓட்ட அனுமதித் தால் பெற்றோர்தான் அதற்கு பொறுப்பு என்பது தெரியாது என்று கூறினர்.

வயது வராமல் சிறுவர்கள், இளையர்கள் சாலைகளில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பதற் காக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று போலி சார் விளக்கினர். "எங்களுக்கு விதிமுறை பற்றி தெரியாது. என்னுடைய 17 வயது மகன் பைக்கில் வகுப்புக்குச் சென்றான். அதற்கு எங்களை சிறைக்கு அனுப்பிவிட்டனர்," என்று பாதிக்கப்பட்ட பெற்றோர் களில் ஒருவரான ஷகீல் அஹமட் கூறினார். காவல்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், பெற் றோர்கள் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் சிறையில் இருந் தால்தான் பிள்ளைகளை வாகனம் ஓட்ட அனுமதிப்பது பற்றி ஒன்றுக்கு இரண்டு முறை சிந்திப்பர்," என்று கூறினார்.