புதுடெல்லி: இந்திய சூப்பர் லீக் காற்பந்துப் போட்டியில் டெல்லியும் புனேவும் தரப்புக்கு இரண்டு கோல்கள் போட்டு சமநிலை கண்டுள்ளன. ஆட்டம் தொடங்கியதிலிருந்து இரு குழுக்களும் தாக்குதலில் மும்முரம் காட்டின. ஆட்டத்தின் 10வது நிமிடத் திலேயே டெல்லி குழுவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. பெனால்டியை எடுத்த கலு உச்சே கோல் போட்டு டெல்லியை முன்னிலைக்குக் கொண்டு சென்றார். ஆனால் டெல்லிக்குக் கிடைத்த இந்தச் சாதகமான நிலை நீடிக்கவில்லை. அடுத்த மூன்று நிமிடங்களில் புனே குழுவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாகப் பயன் படுத்திக் கொண்ட எமிலியானோ அல்பரோ கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தார். 34வது நிமிடத்தில் கலு உச்சே மீண்டும் டெல்லிக்காக கோல் போட்டார். இ டை வே ளை யி ன் போ து டெல்லி அணி 2-1 என முன்னிலை வகித்தது.
டெல்லி=புனே குழுக்கள் சமநிலை
1 mins read

