தா.பாண்டியன்: ரூ.5 லஞ்சத்துக்கு தண்டனை; கடன் பெற்று தப்பினால் ராஜ மரியாதை

தா.பாண்டியன்: ரூ.5 லஞ்சத்துக்கு தண்டனை; கடன் பெற்று தப்பினால் ராஜ மரியாதை

1 mins read

ஈரோடு: இந்தியாவில் 5 ரூபாய், 10 ரூபாய் லஞ்சம் வாங்கினால் தண்டிக்கப்படுவார்கள் என்றும், கோடி கோடியாய் கடன் வாங்கித் தப்பிச் செல்பவர்கள் ராஜ மரி யாதையோடு அனுப்பி வைக்கப்படு வார்கள் என்றும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நவீன விஞ்ஞானம் திருடர்களுக்கு பெரிய வசதிகளைச் செய்து தருவதாக கவலை தெரிவித்தார். கடந்த 1947ஆம் ஆண்டில் ஓர் அமெரிக்க டாலரைப் பெற, 2 ரூபாய் கொடுத்தால் போதும் என்று குறிப்பிட்ட அவர், இன்று ஒரு டாலரைப் பெற ரூ.67.50 கொடுக்க வேண்டியிருப்பதாக சுட்டிக் காட்டினார்.

"அன்றைக்கு ஏழ்மையாக இருந்த இந்தியா கொடுத்த 2 ரூபாய்க்கு இருந்த மரியாதை, இன்று இல்லை. அந்தக் காலக் கட்டத்தில் வெறும் 483 கோடி ரூபாய்க்குத்தான் இந்தியாவிற்கு மொத்த பட்ஜெட்டே போடப்பட்டது. ஆனால், இன்றைக்கு ரூ.19 லட் சம் கோடிக்கு அமைச்சர் அருண் ஜெட்லி நிதிநிலை அறிக்கை தயாரித்துள்ளார். "இந்தியா இன்றைக்குப் பல் வேறு துறைகளில் வளர்ச்சிய டைந்து, பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறது. ஆனால், பண மதிப்பில் ஏன் பின் தங்கிய நிலையில் உள்ளது என் பதை ஆராய வேண்டும்," என தா.பாண்டியன் வலியுறுத்தினார். விஞ்ஞானம் திருடர்களுக்கு ஏற்படுத்தித் தரும் வசதிகள் நாட்டிற்குப் பெரும் ஆபத்தாக அமையும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.