சென்னை: புதுக்கட்சி துவங்கும் முடிவில் இருந்து தினகரன் பின்வாங்கவில்லை என்றும், சசிகலாவை சமாதானப்படுத்தி நாளைக்குள் புதுக்கட்சி துவங்கும் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். 18 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் உயர் நீதிமன் றம் தீர்ப்பை வழங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. எனவே எந்த முடிவாக இருந்தாலும் அதன் பின்னர் எடுக்கலாம் என தினக ரனை கடந்த முறை சந்தித்தபோது சசிகலா அறிவுறுத்தியதாக செய்தி வெளியானது.
இதற்கிடையே நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும் அரசியல் பிரவேசம் தொடர்பான அடுத்த டுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வந்தனர். கமல் தனிக்கட்சி துவங்கி, மக்களையும் சந்தித்து வருகிறார். ரஜினி எந்த நேரத்தி லும் முக்கிய அறிவிப்பை வெளி யிடுவார் எனக் கூறப்படுகிறது. எனவே தானும் தனிக்கட்சி குறித்து இப்போதே அறிவிப்பது நல்லது என தினகரன் கருது வதாகத் தெரிகிறது. "நம்மை நோக்கித்தான் அதிமுக தொண்டர்கள் வருவார் கள். அரசாங்கத்தை எதிர்ப்பதன் மூலம்தான் மக்கள் நம்மை நம்பு கிறார்கள். மோடிக்கு எதிராகப் பேசுவதால்தான் கூட்டம் கூடுகி றது. சிறுபான்மையினரும் நம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

