'மனைவியின் வீண் சந்தேகம் கணவனைக் கொடுமைப்படுத்தும்'

'மனைவியின் வீண் சந்தேகம் கணவனைக் கொடுமைப்படுத்தும்'

1 mins read

புதுடெல்லி: கணவனை அவன் தாலி கட்டிய மனைவி வீணாக சந்தேகப்படுவது கணவனை கொடுமைப்படுத்துவதாகவே கரு தப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் விவாகரத்து தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் அளித் துள்ள தீர்ப்பு: கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர் பிருப்பதாக, மனைவி வீணாக சந்தேகப்படுவதும் கணவனை கொடு மை ப் ப டு த் து வ தா க வே எடுத்துக் கொள்ளமுடியும்.

இது போல் பொய்யாக குற்றம் சுமத்து வது, கணவனுக்கு மன உளைச் சலை ஏற்படுத்துகிறது. அத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டும் போது, அந்தப் பெண்ணுடன் வாழ் வது ஆபத்தாகவே இருக்கும். இவ்வாறு புகார் கூறும்போது மற்றொரு பெண்ணின் கண் ணியத்துக்கும் நற்பெயருக்கும் மனைவியாக வாழ்பவர் களங்கம் ஏற்படுத்துகிறார். இது ஆபத்தான போக்கு. அதனால் இந்த வழக்கில் பொய் புகார் கூறி, சித்திரவதை செய்யும் மனைவிக்கு எதிராக கணவனுக்கு விவாகரத்து அளித்து, குடும்பநல நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு செல்லும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.