தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹெலி டாக்சி சேவை தொடக்கம்

1 mins read

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹெலி-டாக்சி எனும் ஹெலிகாப்டர் சேவை நேற்று முதல் தொடங்கியுள்ளது. தும்பி ஏவியேசன் என்ற நிறுவனம் கெம்பேகவுடா அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து அனேகல்லில் உள்ள மின்னியல் சிட்டிக்கு முதற்கட்டமாக ஹெலி-டாக்சி எனும் ஹெலிகாப்டர் சேவை வழங்குகிறது. இதற்காக 6 பயணிகள் அமரக்கூடிய பெல் 407 ரக இரு ஹெலிகாப் டர்கள் இயக்கப்படுகின்றன. சாலையில் சராசரியாக 2 மணி நேரம் எடுக்கும் பயணம் ஹெலி டாக்சியில் 15 நிமிடமாகக் குறைகிறது. இதற்கு கட்டணம் ரூ.3,500 என்றும் அறிமுகச் சலுகையாக பதிவு செய்பவர்களுக்கு ரூ.2,500 கட்டணம் என்றும் அறிவித்துள்ளது.