ஆட்சியர்களும் காவல்துறையும் இரு கண்களாகச் செயல்பட வேண்டும்: முதல்வர் பழனிசாமி

ஆட்சியர்களும் காவல்துறையும் இரு கண்களாகச் செயல்பட வேண்டும்: முதல்வர் பழனிசாமி

1 mins read
cb3e6352-d8d1-40a9-b405-686e1fc6243b
-

சென்னை: மாவட்ட ஆட்சியர் களும், காவல்துறை கண்காணிப் பாளர்களும் இரு துருவங்கள்போல் இல்லாமல், இரு கண்களைப் போல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என முதல்வர் பழனி சாமி அறிவுறுத்தி உள்ளார். இவ்வாறு செயல்பட்டால் தான், சட்டம் ஒழுங்கை மேலும் சிறப்பாக பேணிக்காக்க இயலும் என மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில் பேசிய போது அவர் குறிப்பிட்டார். பயங்கரவாத அமைப்புகள் உருவாகாமல் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், பயங்கரவாதமும், மதவாதமும் இடதுசாரி தீவிரவாதமும் சமுதாயத்தின் மிகப்பெரிய அச்சுறுத்த லாகும்.

"பயங்கரவாத சவால்களை திறம்பட எதிர்கொள்ள, நமது புல னாய்வு அமைப்புகளை பலப் படுத்தி, பயங்கரவாத அமைப்புகள் உருவாகாமல் தடுத்து, ஆரம்ப நிலையிலேயே களை எடுக்க வேண்டும். "அழிவு சக்திகளைக் கட்டுப் படுத்தி, மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு நீங்கள் செயல்பட்டு மாநிலம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக விளங்கும் வகையில் பணியாற்ற வேண்டும்," என்றார் முதல்வர் பழனிசாமி.

முதல்வர் பழனிசாமி.