கரூர்: காவிரி மேலாண்மை வாரி யம் அமைப்பது தொடர்பில் மத்திய அரசுக்கு எதிராக அதிமுகவில் சிலர் குரல் கொடுக்கத் துவங்கி யுள்ளனர். மேலாண்மை வாரி யத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வலியுறுத்தி உள்ளார். இவ்விஷயத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்தினால் தமிழகத்தின் நலனைக் காக்க அதிமுக போராட்டம் நடத்தும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று முன்தினம் கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்ற ஆணைப்படி 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அர சிடம் வேண்டுகோள் விடுத்திருப் பதாகக் குறிப்பிட்டார்.
"காவிரி பிரச்சினையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் வரை சென்று நீதியை நிலைநாட்டி னார். தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் நாம் எதிர் பார்த்த அளவுக்கு தண்ணீர் கிடைக்காவிட்டாலும் கர்நாடக அரசு, தமிழக அரசை ஆலோசிக் காமல் எந்த அணையும் கட்டக் கூடாது என்ற முடிவு எட்டப்பட்டது வரவேற்கத்தக்கது.
தம்பிதுரை. படம்: இணையம்

