தி.மலை: தங்கள் அணியில் உள்ள 18 சட்டப்பேரவை உறுப் பினர்கள் மீதான தீர்ப்புக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற் றம் ஏற்படும் என ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சிலர் சடுகுடு ஆட்டம் ஆடுவதாக திருவண்ணாமலை யில் செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் குறிப்பிட்டார். ஊழல் குறித்த குற்றச்சாட் டுக்கு நேரடியாக பதில் கூறாமல், அவன், இவன் என்று முதல்வர் பழனிசாமி ஒருமையில் பேசுவ தாகச் சுட்டிக்காட்டிய அவர், இத் தகைய போக்கு முதல்வர் பதவி வகிக்கும் ஒருவருக்கு அழகல்ல என்றார்.
"சசிகலா குடும்பத்தினர் சந்தர்ப்பவாதிகள் என்று நடிகர் கமல் கூறிய குற்றச்சாட்டு பற்றி கேட்கிறீர்கள். கமல் கூறுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர் என்ன பேசுகி றார் என்று அவருக்கே தெரியாது. அவருக்கு மக்கள் பதில் சொல் வார்கள்," என்றார் தினகரன். வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வேண்டுமானால் பாஜக வெற்றி பெறலாம் என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் அக்கட்சியால் வெற்றி பெற முடியாது என்றார். "எனது அணியில் உள்ள 18 சட்டப்பேரவை உறுப்பினர்களும் முதல்வரை மாற்ற வேண்டும் என்றுதான் கூறினர். ஆனால் நான் இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்கிறேன். அந்தள வுக்கு இங்கு ஆட்சி நடக்கிறது," என்று தினகரன் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன். படம்: இணையம்

