புதிய மூன்றாவது அணி ஆயத்தம்

புதிய மூன்றாவது அணி ஆயத்தம்

2 mins read

கோல்கத்தா: நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடை பெற உள்ள நிலையில், தேசிய அளவில் பாஜக, காங்கிரசை எதிர்த்து நாட்டில் வலுவாக நிற்கும் வகையில் ஒரு மூன் றாவது அணியை உருவாக்க மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத் துள்ளார். இருவரும் இந்தக் கூட்டணி தொடர்பாக 12 நிமிடம் தொலைபேசியில் பேசினர். வடகிழக்கு மாநில சட்ட மன்றத் தேர்தல்களில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் படு தோல்வியைச் சந்தித்த நிலை யில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "கூட் டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொள்ளாததே தோல்விக் குக் காரணம்," என்றார்.

இதுகுறித்து செய்தியாளர்களி டம் பேசிய திரிணாமூல் காங் கிரஸ் கட்சி செய்தித் தொடர் பாளர் டெரக் ஓ பிரெய்ன், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, தெலுங்கு தேசம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், திமுக உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து செயல்படுகின் றன. சிவசேனா கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இவர்கள் ஒன்றிணைந்து புதிய கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறினார். பாஜகவுக்கு எதிராக வலு வான கூட்டணி அமைக்க காங் கிரஸ் கட்சி முயற்சி எடுத்து வருகிறது.

இதற்காக மாநில கட்சிகள், கம்யூனிஸ்டு கட்சிகளை ஒருங்கிணைத்துத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது. இதற்கிடையே பாஜக, காங் கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக தேசிய அளவில் 3வது அணி அமைக்கவேண்டும் என்று தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் சில நாட்களுக்கு முன்பு கூறினார். தனது முடிவுக்கு மேலும் பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்து இருந்தார்.