அகர்தலா: திரிபுராவில் பாஜக வெற்றிபெற்ற 48 மணி நேரத்திற் குள்ளாக லெனின் சிலையை உடைத்துத் தள்ளியுள்ளதாக பாஜகவினர் மீது இடதுசாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ராஜ்நாத் சிங் திரிபுரா ஆளுநரிடமும் போலிஸ் அதிகாரிகளிடமும் பேச்சு நடத்திய நிலையில் இந்த வன்முறை நட வடிக்கைகளை உடனே நிறுத்தும் படியும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். மூன்று லட்ச ரூபாயில் அமைக் கப்பட்ட லெனின் சிலை திரிபுரா வில் இடதுசாரிகளின் 21 ஆண்டு கால ஆட்சியைக் கொண்டாடும் விதமாக கடந்த 2013ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. திரிபுரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பெலோனியா நகரில் நிறுவப்பட் டிருந்த லெனின் சிலையை பாஜக வினர் ஜேசிபி இயந்திரம் மூலம் உடைத்தனர். அப்போது 'பாரத் மாதா கி ஜெய்' என்றும் பாஜக வினர் முழக்கமிட்டனர். பாஜக வினரின் இந்த செயலுக்குப் பல் வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
படம்: ஊடகம்

