இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளி நாட்டுவாழ் இந்தியர்களைச் சந் திப்பதற்காக சிங்கப்பூர், மலேசியா பயணம் மேற்கொண்டு இருக் கிறார். ராகுல் காந்தியின் மூன்று நாள் பயணம் இன்று மார்ச் 8ஆம் தேதி தொடங்குகிறது. அவர் இன்றும் நாளையும் சிங்கப்பூரில் இருப்பார். பிறகு அவர் மலேசியா செல்வார். சிங்கப்பூரில் இன்று இந்திய தேசிய ராணுவ நினைவுச் சின்னத் தைப் பார்வையிடவுள்ள அவர், பின் இந்தியர் சங்கத்தில் சிங்கப் பூர் இந்தியர்களைச் சந்திக்கிறார். ராகுலின் கொள்ளுத்தாத்தாவான ஜவகர்லால் நேரு, இந்தியர் சங்கத் திற்கு அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின் சிங்கப்பூர் தேசிய பல் கலைக்கழகத்தில், லீ குவான் இயூ பொதுக் கொள்கைப் பள்ளி யில் அவர் உரையாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் லீ சியன் லூங்கை அவர் நாளை சந்தித்துப் பேசக் கூடும் என்று காங்கிரஸ் பேச்சாளர் சி.ஆர்.கேசவன் தமிழ் முரசிடம் தெரிவித்தார். சிங்கப்பூரில் இருக்கும்போது ராகுல் காந்தி, வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடையே உரையாற்று வார் என்றும் இந்தியாவின் 'ஸீ நியூஸ்' தெரிவித்தது. இந்திய பட்டத்தொழிலர்கள், தொழிலதிபர் களுடன் ராகுல் காந்தி பிரத்தி யேகக் கூட்டம் நடத்துவார் என்றும் அந்த ஊடகம் குறிப்பிட் டுள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் உருவப்படம் தாங்கிய பதாகையை ஏந்தி சாங்கி விமான நிலையத்தில் அவரை வரவேற்ற சிறுவன் ரேயன். அதைக் கண்டு வியந்த ராகுல், அச்சிறுவனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அவனை மகிழ்ச்சிப்படுத்தினார். படம்: சி.ஆர்.கேசவன்

