ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகும் சசிகுமாரின் 'அசுரவதம்'

ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகும் சசிகுமாரின் 'அசுரவதம்'

1 mins read
4b1a54d5-3a70-42df-9c92-d3b42d55d012
-

சசிகுமார் நாயகனாகவும், நந்திதா நாயகியாகவும் நடிக்கும் படம் 'அசுரவதம்'. 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' படப்புகழ் எம்.மருதுபாண்டியன் இப்படத்தை இயக்குகிறார். இயக்குநர் கவுதம் மேனன் இதில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றதாகவும் தற்போது பின்னணிப் பணிகள் மும்முரமாக நடந்து வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.