தினகரன்: யார் நல்ல தலைவர் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்

தினகரன்: யார் நல்ல தலைவர் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்

1 mins read
63b722d5-bcee-46ea-8aab-4f991b799fff
-

விழுப்புரம்: தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று ரஜினி சொல்வது தவறு என ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யார் நல்ல தலை வர்கள் என்பதை மக்கள்தான் முடிவு செய்வர் என்றார். தமிழகத்தில் அடுத்து நடை பெற உள்ள தேர்தலுக்குப் பின்பு எந்தக் கட்சி நிலைத்து நிற்கும், யார் வீட்டுக்குப் போவார்கள் என்பது தெரியும் என்று குறிப்பிட்ட தினகரன், கலவரம் இல்லாமல் அமைதிப் பூங்காவாகத் தமிழகம் திகழும் நிலையில், ஒருசிலர் கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவதாகச் சாடினார். "அதிமுகவில் உள்ள தொண் டர்களில் 90 விழுக்காட்டினருக் கும் மேல் எங்கள் பின்னால் உள் ளனர். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் நாங்கள் வெற்றி பெறு வோம். வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் இருநூறு தொகுதிகளிலாவது வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். "அரசியல் வெற்றிடம் என ரஜினி சொல்வது சரியல்ல. அவர் அப்படிப் பேசக்கூடாது," என்றார் தினகரன்.