காவிரி விவகாரம் பற்றி ஸ்டாலினுடன் பேசிய ஓபிஎஸ்: தமிழக அரசியலில் நல்ல மாற்றம்

1 mins read

சென்னை: காவிரி விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினு டன் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொலைபேசி வழி ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தமிழக நலன் கருதி ஆளும் அதிமுகவும் திமுக வும் இணைந்து செயல்படுவது வரவேற்கத்தக்க மாற்றம் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் காவிரிப் பிரச் சினை தொடர்பாக முதல்வர் பழனிசாமியைச் சந்தித்துப் பேசி இருந்தார் ஸ்டாலின். அப்போது மார்ச் 8ஆம் தேதியன்று சட்டப்பேர வையைக் கூட்டி விவாதிக்கலாம் என முதல்வர் தமக்கு உறுதியளித் ததாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பேச, 4 மாநில அரசு களுக்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்தே ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். "8ஆம் தேதி சட்டமன்றத்தைக் கூட்டுவதாகச் சொல்லி இருந் தோம். ஆனால், திடீரென டெல்லியி ல் இருந்து அழைப்பு அனுப்பி இருக் கிறார்கள். எனவே அந்தக் கூட் டம் 9ஆம் தேதி முடிந்த பிறகு சட்டப்பேரவையைக் கூட்ட லாமா?" என துணை முதல்வர் கேட்டதாகவும், இதை ஸ்டாலின் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப் படு கிறது. காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழகத்தின் இரு முக்கிய கட்சி கள் இணக்கமாகச் செயல்படுவது ஆரோக்கியமானது என்று அரசி யல் கவனிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.