தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

1 mins read
Google News Preferred Icon

ராமேசுவரம்: நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் தங்களை விரட்டி அடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த 50 மீனவர்கள் 10 படகுகளில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென இலங்கை கடற்படையினர் அங்கு வந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து கடல் எல்லையைத் தாண்டி வந்ததாகக் கூறி கடற்படையினர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.