மதுரை: தேசிய அளவில் தமிழகத்தில் தான் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகம் உள்ளது என்று மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆண்டு தோறும் 16 ஆயிரம் பேர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். "நாட்டில் 10 லட்சம் பேரில் 200 பேருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டிய நிலை உள்ளது. அரிசி, இனிப்பு ஆகியவற்றை அதிகம் உட்கொள்வதாலும், உடல் பருமனாலும் தமிழகத்தில் 13 விழுக்காட்டினர் நீரிழிவு நோயாளிகளாக உள்ளனர்," என்று மருத்துவர் சம்பத்குமார் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் தான் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகம்: மருத்துவர் தகவல்
1 mins read

