அமைச்சர் ஜெயகுமார்: எச் ராஜாவுக்குச் சிறை உறுதி

அமைச்சர் ஜெயகுமார்: எச் ராஜாவுக்குச் சிறை உறுதி

1 mins read

சென்னை: தமிழ் மொழியை அழிப் பதற்காகவே திராவிடம் என்ற சொல்லை ஈ.வெ.ராமசாமி கொண்டுவந்தார் என்றும் தமிழ் என்ற சனியனே இருக்கக்கூடாது என அவர் பேசியதாகவும் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தெரி வித்துள்ளார். இப்படி தவறான தகவல் கொடுத்து மக்களைத் திசைமாற்றி, வன்முறைக் கலாசாரத்தை உரு வாக்க நினைப்பவர்கள் சிறைக்குப் போவது உறுதி என்று தமிழக அமைச்சர் ஜெயகுமார் கூறினார். "மலிவான விளம்பரத்துக்காக, இந்த மாதிரி கூற்றுகளைச் சொல் லக்கூடாது. இதை தமிழக மக்கள் நம்பமாட்டார்கள். "தமிழை அவமதித்து, தமிழை கேவலப்படுத்துகிற எந்த செயலை யும் எந்த நிலையிலும் அரசு ஏற்றுக்கொள்ளாது. அவர் யாராக இருந்தாலும் எவராக இருந்தாலும் சரி, கைதுசெய்ய வேண்டிய நபர் தான்," என்றார் அமைச்சர். "ஏற்கெனவே எச்.ராஜா வருத் தம் தெரிவித்தார். இப்போது மீண் டும் தேவையில்லாமல் பேசுகிறார். அவர் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று மீன்வளத்துறை அமைச்சர் திட்ட வட்டமாகத் தெரிவித்தார்.