சென்னை: தமிழகத்தில் வன் முறையைத் தூண்டும் வகையில் எச்.ராஜாவை பேச வைத்து பாஜக தலைமை வேடிக்கை பார்த்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழகத்தில் வன்முறையை கட்டவிழ்த்து ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என்றார். "அதனால்தான் எச்.ராஜாவை பேச வைத்து வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் பாஜகவால் வன்முறையை மட்டுமே தூண்டி விட முடியும். நிச்சயமாக ஆட் சியை ஒருபோதும் பிடிக்க முடியாது. "தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் அதிகரித்து வருகிறது. அதே போல ஆணவப் படுகொலைகளும் அதிகரித்துள்ளன. பெண்க ளுக்கு எதிரான வன்முறைகளை கண்காணிப்பதற்கு தனி புல னாய்வு குழு அமைக்க வேண் டும்," என்றார் திருமாவளவன்.
வன்முறையைத் தூண்டும் பாஜக: திருமா
1 mins read

