ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5 டன் பழங்கள் பறிமுதல்

2 mins read

கோவை: கோயம்பேட்டில் உள்ள காய், கனி விற்பனைச் சந்தையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிகாலை வேளை யில் மேற்கொண்ட அதிரடிச் சோதனையால் பரபரப்பு நிலவியது. சோதனையின்போது ரசாயனங் களால் செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட 5 டன் பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னையில் அமைந்துள்ள கோயம்பேடு சந்தையில், தமிழகத் தின் பல்வேறு பகுதிகளில் இருந் தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராள மான காய்கறிகளும் பழங்களும் வந்து குவிகின்றன.

இவற்றை உடனுக்குடன் சில் லறை வியாபாரிகளிடம் விற்பனை செய்யும் பொருட்டு வியாபாரிகள் சில குறுக்கு வழிகளைப் பின் பற்றுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக பழ வகைகளை விரைவில் பழுக்க வைக்கும் நோக்கத்துடன் பல்வேறு ரசா யனங்களைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட பழங்களால், பல் வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின் றனர்.

இந்நிலையில் நேற்று அதி காலை கோயம்பேடு சந்தையில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அச்சமயம் ஏராளமான பழங்கள் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக் கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மொத்தம் 5 டன் பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது போன்ற சோதனை நடவடிக்கைகள் இனி அவ்வப் போது நடைபெறும் என வியாபாரி களை அதிகாரிகள் எச்சரித்துச் சென்றனர். இதற்கிடையே, சென்னையில் உள்ள சில உணவகங்கள், அண்டை மாநிலங்களில் இருந்து வாங்கப்படும் கெட்டுப்போன இறைச்சியைக் கொண்டு பல்வேறு உணவு வகைகளைத் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்ப தாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்தும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.