71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

1 mins read
32a04842-ee66-4817-bf8f-993082865dc2
-

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து அளிக்கும் முகாம் இரண்டாவது தவணையாக நேற்று நடந்தது. இதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் பேருந்து, ரயில், விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகள், சுங்கச் சாவடிகளில் 1,652 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 71 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படம்: தகவல் ஊடகம்