சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் தொடர்ந்து போராடி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. காவிரி பிரச்சினையில், தமிழக உரிமைகளை நிலைநாட்டவும் காவிரி விவசாயிகளின் நலன் களைப் பாதுகாக்கவும் ஜெய லலிதா வழியில் செயல்படும் அரசு அனைத்து நடவடிக்கைக ளையும் உறுதியாக மேற்கொள்ளும் என அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரி யத்தை, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு அமைப்பதை தவிர மத்திய அரசுக்கு வேறு மாற்று வழி இல்லை எனவும் தமிழக அரசு சுட்டிக்காட்டி உள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 16ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில், இரு தினங்களுக்கு முன்னர் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப் பட்ட கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை மாநில உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் விவாதிக் கப்பட்ட விஷயங்கள் குறித்து சென்னை திரும்பிய தமிழக அதிகாரிகள், முதல்வர் பழனி சாமியிடம் விவரித்தனர். இதைய டுத்து தமிழக அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது.

